அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில் - அன்னதானத்திட்டம்

இத்திருக்கோயிலில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட அன்னதானத்திட்டம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. தினமும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கு நிரந்தர உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். அவர்கள் ரூ25000 செலுத்தினால் அத்தொகையை வங்கியில் முதலீடு செய்து உபயதாரர் விரும்பும் நாளில் ஆண்டிற்கு ஒருநாள் அவர்கள் பெயரில் அன்னதானம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் நிரந்தர உபயதாரர்கள் உபயமாக ரூ25000 செலுத்தி அன்னதானத்திட்டத்தில் கலந்து கொள்ளலாம். வெள்ளிக்கிழமை மற்றும் விஷேச நாட்களில் வடை பாயாசத்துடன் கூடிய அன்னதானத்திட்டத்தில் ரூ2500 உபயமாக செலுத்தி கலந்து கொள்ளலாம்.

அனைத்து திட்ட நன்கொடைகளுக்கு இந்திய அரசின் ச.பி.80 ஜியின் படி வருமான வரிவிலக்கு பெறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளில் ஆன்மீக வகுப்புகள் 3-00 மணி முதல் 4-00 மணி வரை நடத்தப்படுகின்றன. 25 க்கும் மேற்பட்ட குழந்தைகள் வழக்கமாக ஆன்மீக வகுப்புகளில் கலந்து கொள்கின்றனர்.