தன லட்சுமி :


‘தனம் ’ என்பதற்குச் ‘செல்வம் ’ என்று பொருள். ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை ’ என்ற வள்ளுவரின் குறள் நெறிக்கேற்பச் செல்வ வளத்தை அளிப்பவள் தனலட்சுமி, தனலட்சுமியின் அருள் கிடைத்தால் செல்வங்கள் குவிகின்றன என்று நிகமாந்த தேசிகன் சுறுகிறார்.

‘தனலட்சுமி ’ இத்திருக்கோயிலின் இரண்டாம் தளத்தில் கிழக்கு முகம் நோக்கி அமர்ந்திருக்கிறாள்.

வறுமையால் வாடும் அன்பர்கள் மலர் மாலை சார்த்தியும், புத்தாடை அணிவித்தும், அர்ச்சனை செய்தும், தனலட்சுமியின் அருளைப் பெறுகின்றனர்.

அஷ்டலட்சுமியைத் துதிக்கும் வடமொழி நூல் ஒன்று இவளைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு வருணிக்கிறது.
‘திமி திமி திந்திமி திந்திமி திந்திமி ’ என்று துந்துபி முழங்கப் பூரண வடிவானவளே ! கும்கும் கும்கும் எனச் சங்கம் இனிமையோடு முழங்க, வேதங்களும், புராணங்களும் துதித்துப் போற்ற, வேத வழியில் நன்னெறி காட்டுபவளே ! மதுசூதனின் ஆபரணமே ! உன்னைத் தரித்திருப்பதால் நாராயணனும் பெருமை பெற்று விளங்குகிறான். எம்மைக் காத்து வாழ்விப்பவள் நீயே! ’