தரிசன நேரம்

காலை - 6.30 – 12.00மதியம்

மாலை - 4.00 – 9.00 இரவு

வெள்ளி மற்றும் ஞாயிறு : காலை நேர பூஜை 1.00 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பூஜை நேரங்கள் திருவிழா மற்றும் இதர நாட்களில் மாறுதலுக்குட்பட்டது.


எட்டு (அஷ்ட) லட்சுமிகள்

மற்ற திருத்தலங்கள்

வீடியோ

அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில்

    மகாலட்சுமி திருக்கோயில் கிழக்கு நோக்கி வங்கக்கடலை நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. 45 அடி நீளமும் 45 அடி அகலமும் உள்ள சதுர அமைப்பின் மீது 63 அடி உயரமுடைய இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அடிப்பீடம் முன்றரை அடி உயரம் உள்ளது.

    இத்திருக்கோயிலை ஒரு முறை வழிபட்டால் கூட நினைவில் இருக்கும் படி அஷ்டாங்க விமானத்தில் ஒன்பது சன்னதிகள் அமைந்துள்ளன. அதே போன்று தரைத்தளத்திற்கு மேல் சென்று இறங்கி வரும் பாதை ஓம் வடிவாகவும் அமைந்துள்ளது.தரைத்தளத்தில் கிழக்கு நோக்கி மகாலட்சுமி உடனுறை மகாவிஷ்ணு இருவரும் திருமணக்கோலத்தில் திருக்காட்சி தருகின்றனர். கருவறையின் முன்புறம் இருபத்து நான்கு மண்டபத்திற்கு கிழக்கே புதிய சொற்பொழிவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.மகாலட்சுமி சன்னதியைத் தரிசனம் செய்துவிட்டு வரும்போது பதினெட்டு படிகள் உள்ளன.