அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில் - சமுத்திர புஷ்கரணி

பெரும்பாலும் திருத்தலங்கள் ஆறுகள், குளங்கள் , ஏரிகள் போன்றவற்றையே தீர்த்தங்களாகக் கொண்டு விளங்குகின்றன. ஆனால் இத்திருக்கோயில் வங்கக் கடலையே தீர்த்தமாக (புஷ்கரணியாக)க் கொண்டுள்ளது. இது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.


வில்வ விருட்சம்

இத்திருக்கோயிலின் தலவிருட்சம் (மரம்) வில்வ விருட்சமாகம். வில்வம் மகாலட்சுமிக்கு உகந்த மரம். மேலும், மகாலட்சுமி வில்வ மரத்தில் குடி கொண்டிருக்கிறாள் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. வில்வத்தை " லட்சுமி வாசம் " என வழங்கப்படும் வழக்கமும் உண்டு. மகாலட்சுமி வில்வத்தில் நுனி முதல் வேர் வரையில் வசிப்பதாக நம்பப்படுகிறது.