விஜய லட்சுமி :


‘விஜயம் ’ என்பதற்கு ‘வெற்றி ’ என்று பொருள். வெற்றியை அருள்பவள் விஜயலட்சுமி. எடுத்த காரியங்களை வெற்றி பெறச் செய்பவள். விஜயலட்சுமிக்கு வெற்றித் திருமகள் என்ற பெயரும் உண்டு.

இத்திருக்கோயிலின் முதல் தளத்தில் மேற்கு முகமாக அன்னப் பறவையின் மீது வீற்றிருக்கிறாள். விஜயலட்சுமி . இவள் அனைத்து வெற்றிகளையும் மங்களத்தோடு அளிக்கும் " சர்வமங்களை " என்னும் நாமம் பெற் நாராயணியாகும்.

தொழில் புரிபவர்கள் தங்கள் தொழிலில் வெற்றி பெற விஜயலட்சுமிக்கு புத்தாடை அணிவித்து குங்கும அர்ச்சனை செய்து, வழிபட்டு வெற்றியருளைப் பெறுகிறார்கள்.

அஷ்டலட்சுமியைத் துதிக்கும் வடமொழி நூல் ஒன்று
‘ தாமரை மலரில் பொலிபவளே ! நற்கதியளிப்பவளே ! ஞானம் வளர்ப்பவளே ! கான மயமானவளே ! வெற்றியைக் குறைவின்றி நல்குபவளே ! அனுதினமும் குங்குமத்தினாலும் , மலர்களினாலும், அர்ச்சனை பெறுபவளே ! வாத்தியங்கள் முழங்க , சங்கர பகவத் பாதாள் கனகதாரா துதி பாட , அவருக்கு அருள் மூலம் பெருமையளித்தவளே ! மதுசூதனின் மனைவியே ! வெற்றித் திருமகளே ! என்னை எப்பொழுதும் காக்க வேண்டும் ’ என துதிக்கிறது.